top of page

Aadhaar Services

 

ஆதார் பதிவு நடைமுறைகள்.

ஆதார் அட்டைக்கு நீங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. ஆதாருக்காக உங்கள் விரல் ரேகை, விழித்திரை ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால், ஆதாருக்கு விண்ணப்பிக்க பதிவு முகமையால் அமைக்கப்பட்ட பதிவு மையத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். உங்களுக்கு அருகில் பதிவு மையம் எங்கு இருக்கிறது என்பதை https://appointments.uidai.gov.in/easearch.aspx என்ற இணைப்பில் சென்று அறியலாம்.  

ஊரப்பாக்கம்  கூடுவாஞ்சேரி  வண்டலூர்  பகுதி மக்கள் கஜலக்ஷ்மி இ சேவை   மையத்தை அணுகலாம்.

ஆதார் கட்டணம் .

  • புதிய ஆதார் எடுப்பது - இலவசம் .

  • ஆதார் முகவரி  மாற்றம்  செய்ய  ரூபாய் 100

  • ஆதார் தொலைபேசி எண்  மாற்றம்  செய்ய  ரூபாய் 100

  • ஆதார் பிறந்த தேதி   மாற்றம்  செய்ய  ரூபாய் 100

  • ஆதார் பெயர்   மாற்றம்  செய்ய  ரூபாய் 100

  • பயோ மெட்ரிக் மாற்றம்  செய்ய - ரூபாய் 100

              பிவிசி கார்டு வழங்கப்படும் .

என்னென்ன ஆவணங்கள் தேவை?

ஆதார் பதிவு செய்வதற்காகப் பதிவு மையத்தில் வழங்கப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன் அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட 18 வகையான அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றையும், குடும்ப அட்டை, வீட்டுவரி ரசீது உள்ளிட்ட 35 வகையான முகவரிச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றையும் சமர்ப்பித்தால் போதுமானது. இந்தச் சான்றுகளின் ஒரிஜினலைப் பதிவு மையத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதை ஸ்கேன் செய்துகொண்டு திருப்பித் தந்துவிடுவார்கள்.

உங்களுக்குத் தனியாக அடையாளச் சான்று/முகவரிச் சான்று இல்லாத நிலையில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணி அட்டை ஆகியவை செல்லத்தக்க அடையாள/முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். அப்படி இருக்கும்பட்சத்தில், குடும்பத் தலைவர் உங்களின் அடையாளம் மற்றும் முகவரியை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். முகவரிச் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அஞ்சல் மூலம் கடிதம் வழங்குவதற்கு போதுமான தாக இல்லை என்றால், முகவரிச் சான்றில் வீட்டு எண், சந்து எண், தெரு பெயர் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

 

எழுத்துப் பிழைகளை சரி செய்யவும், பின்கோடு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும் அனுமதி உண்டு. முகவரிச் சான்றில் உள்ள முகவரியின் அடிப்படையை மாற்றிவிடாத வகையிலான திருத்தங்கள் அனுமதிக்கப்படும்.

 

ஒருவேளை நீங்கள் கோரும் திருத்தம் பெரியதாகவும், அடிப்படை முகவரியை மாற்றக்கூடியதாகவும் இருந்தால், மாற்று முகவரிச் சான்றை வழங்கி பதிவு செய்துகொள்ள வேண்டியிருக்கும். இப்போது வசிக்கும் முகவரி, சொந்த ஊரின் முகவரி என ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில், அவற்றில் எந்த முகவரியில் ஆதார் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்யலாம்.

ஒப்புகைச் சீட்டு/பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட டிமோகிராபிக் தகவல்கள் தவறானதாக இருந்தால் என்ன செய்வது?

உங்கள் பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட டிமோகிராபிக் தகவல்களில் பதிவு ஆவணத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பதிவு செய்த நேரத்திலிருந்து 96 மணி நேரம்வரை அதை நீங்கள் இ-சேவை மையத்தை அணுகி திருத்திக்கொள்ளலாம். இந்த 96 மணி நேரம் என்பது ஒப்புகைச் சீட்டு/ பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு நேரத்திலிருந்து தொடங்கும். 96 மணி நேரத்துக்குள் உங்களின் தகவல்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால், உங்களின் ஆதார் உருவாக்கப்பட்ட பிறகு, அதில் உள்ள தகவல்களைத் திருத்திக்கொள்ளலாம். அந்தத் தகவல்களைத் திருத்துவதற்கு நீங்கள் திருத்தும் தகவலின் சான்றுக்கான ஆவணத்தின் ஒரிஜினலை இ-சேவை மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

எந்த வயதில் பதிவு செய்யலாம்?

ஆதார் பதிவு செய்துகொள்ள எந்த வயது வரம்பும் இல்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகூட ஆதாருக்குப் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து அது உருவாக்கப்படுவதற்கு

90 நாள்கள் ஆகும். உங்களின் ஆதார் உருவாக்கப்பட்ட பின்னர், அதுகுறித்த தகவல் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும். இல்லையெனில், https://resident.uidai.gov.in/check-aadhaar என்ற இணைப்பை க்ளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆதார் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்களின் ஆதார் எண் உருவாக்கப்பட்டவுடன் https://uidai.gov.in/ta/ என்ற இணையதளத்துக்குச் சென்று அதிலுள்ள ஆதார் பதிவு பகுதியில் உள்ள ‘டவுன்லோடு ஆதார்’ பட்டனை க்ளிக் செய்து மின்னணு ஆதாரைப் பதிவிறக்கம் செய்ய முடியும். ஒரிஜினல் ஆதாருக்கு உள்ள அதே மதிப்பு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னணு ஆதாருக்கும் உண்டு.

ஆதாருக்காகப் பதிவு செய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு/ஆதார் கடிதம் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

உங்களின் மொபைல் எண் ஆதாரில் பதிவு செய்யப்பட்டிருந்தால், https://uidai.gov.in/ta/ என்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையத் தின் இணையதளத்தில் ஆதார் பதிவுப் பகுதியில் உள்ள ‘தவறவிட்ட ஆதார் அடையாளப் பதிவு எண்ணைத் திரும்பப் பெற’ என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆதார் பதிவு எண் அல்லது ஆதாரைக் கண்டுபிடிக்கலாம். பின்னர் உங்கள் பெயரையும், ஆதாரில் பதிவு செய்துள்ள செல்பேசி எண்ணையும் உள்ளிட்டால் உங்களின் ஆதார் பதிவு எண்/ஆதார் உங்களின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை ஆதாரில் பதிவு செய்யவில்லையெனில், அருகிலுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்துக்குத்தான் செல்ல வேண்டும்.

 

© 2025 by G.R.K.Kamalakkannan  . All Rigts Reseverd

  • Facebook Clean
  • Twitter Clean
bottom of page