top of page

TNeSevai

இ-சேவை மையங்கள்

இணைய வழியில் அரசு இ-சேவை மையங்களின் மூலமாக, தொலைதூர கிராமத்திலிருக்கும் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே அனைத்து சேவைகளையும் வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளது. மாநிலத்தின் வெவ்வேறு அரசுத் துறைகளின் மின் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில், ஒரு பொதுவான இடத்தில் வழங்கும் நோக்கில் அரசு இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.

தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), புது வாழ்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கிராமப்புற வறுமை ஒழிப்பு சங்கங்கள் (VPRC), தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் – பிரான்சிஸ் (TACTV Franchise), வேளாண்மை அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனம் (IFAD) மற்றும் கிராமப்புறத் தொழில்முனைவோர் (VLE) ஆகியவற்றின் மூலம் அரசு இ-சேவை மையங்கள் நடத்தப்படுகின்றன. மொத்தத்தில் மாநில முழுவதும் 12,649 அரசு இ-சேவை மையங்களை, 13088 செயலிடை முகப்புகளுடன் தமிழகம் முழுவதும் நிறுவியுள்ளது .

ஊரப்பாக்கம்  கூடுவாஞ்சேரி  வண்டலூர்  பகுதி மக்கள் கஜலக்ஷ்மி இ-சேவை  மையம் கிராமப்புறத் தொழில்முனைவோர் (VLE) சேர்ந்தது.

இ – சேவை மையங்கள்மூலம் வழங்கப்படும் சேவைகள்.

  1. வருமானச் சான்றிதழ்.

  2. பிறப்பிடச் சான்றிதழ்.

  3. இருப்பிடச் சான்றிதழ்.

  4. சாதி சான்றிதழ்.

  5. குடும்பத்தில் முதல்பட்டதாரிச் சான்றிதழ்.

  6. கணவனால் கைவிடப்பட்டவர் என்ற சான்றிதழ்.

  7. குடும்ப இடப்பெயர்வுச் சான்றிதழ்.

  8. வேலையில்லாச் சான்றிதழ்.

  9. விதவைச் சான்றிதழ்.

  10. விவசாய வருமானச் சான்றிதழ்.

  11. மாற்றுதிறனாளி ஓய்வூதிய திட்டம்.

  12. கல்வி ஆவணங்கள்பேரிடரின்போது தொலைந்தமைக்கான சான்றிதழ்.

  13. ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ்.

  14. திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்றிதழ்.

  15. கலப்புத் திருமணச் சான்றிதழ்.

  16. வாரிசு சான்றிதழ்.

  17. சொத்து மதிப்புச் சான்றிதழ்.

  18. அடகு பிடிப்போர் உரிமம் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்குதல்.

  19. வட்டிக்குப் பணம் கொடுப்போர் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்குதல்.

  20. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ்.

  21. சிறு / குறு விவசாயி சான்றிதழ்.

  22. மின்-அடங்கல்.

  23. இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்..

  24. இந்திரா காந்தி விதவைகள் ஓய்வூதிய தேசியத் திட்டம்.

  25. இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய தேசியத் திட்டம்.

  26. மாற்றுதிறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்.

  27. ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்டபெண்கள் ஓய்வூதியத் திட்டம்.

  28. திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியத் திட்டம்.

  29. ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்.

  30. தமிழ் நிலம் - முழுநிலப் பட்டா மாறுதல்.

  31. தமிழ் நிலம் –கூட்டுப் பட்டா மாறுதல்.

  32. தமிழ் நிலம் - உட்பிரிவு.

  33. குறைதீர் நாள் மனு.

  34. தமிழ் நிலம் – ‘அ’ பதிவேடு விவரம்.

  35. தமிழ் நிலம் - சிட்டா விவரம்.

  36. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்.

  37. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் I.

  38. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் II.

  39. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்.

  40. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்.

  41. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டம்.

  42. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

  43. புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல்.

  44. அட்டை மாற்றல் (புதிய குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்தல், முகவரி மாற்றம், கார்டு வகை மாற்றம், சிலிண்டர் மாற்றம், குடும்பத் தலைவர் உறுப்பினர் மாற்றம், பயனாளியின் புகைப்படம் மாற்றம்)

  45. குடும்ப அட்டை ஒப்படைத்தல் / ரத்து செய்தல்.

  46. புதிய பயனர் பதிவு செய்தல்.

  47. குடும்ப அட்டையினை முடக்குதல் / விடுவித்தல்.

  48. மின்னணு அட்டை அச்சிடுதல்.

  49. சமூக சேவை பதிவேடு நிலை.

  50. முதல் தகவல் அறிக்கை நிலை.

  51. இணையவழி புகார் பதிவு செய்தல்.

  52. புகார் நிலை அறிதல்.

  53. மகப்பேறு முன்பதிவு.

  54. வாகன விவரம் அறிதல்.

  55. முதல் தகவல் அறிக்கை பார்வையிடுதல்.

  56. சாலை விபத்து வழக்குகளில் ஆவணங்களை பதிவிறக்கம் செய்தல்.

  57. தொலைந்த ஆவணங்களின் அறிக்கை.

  58. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளிமேற்படிப்பிற்கு, மைய அரசின் கல்வி உதவித் திட்டம்..

  59. பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி மேற்படிப்பிற்கு, மைய அரசின் கல்வி உதவித் திட்டம்..

  60. பள்ளி மேற்படிப்பிற்கான மாநிலஅரசின் சிறப்புக் கல்வி உதவித் திட்டம்.

  61. மேற்படிப்பிற்கான சிறப்பு கல்வி உதவித் திட்டம்.

  62. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி மேற்படிப்புக் கல்வி உதவித் திட்டங்கள்.

  63. தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவி.

  64. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பட்டப்படிப்பிற்கான நிதியுதவித் திட்டம்.

  65. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பட்டயப்படிப்பிற்கான நிதியுதவித் திட்டம்.

  66. மேற்படிப்பிற்கான சிறப்பு கல்வி உதவித் திட்டம்.

  67. உலமா ஓய்வூதிய திட்டம்.

  68. மகப்பேறு முன்பதிவு.

  69. கொதிகலன் சட்டத்தின் கீழ் உரிமம் பதிவு செய்தல்.

  70. கொதிகலன் சட்டத்தின் கீழ் உரிமம் புதுப்பித்தல்.

  71. உற்பத்தி மற்றும் புதுப்பிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தல்.

  72. கட்டடம் புதுப்பிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தல்.

  73. வரி இல்லா இதர கட்டணங்கள்.

  74. தொழில் வரி வசூலித்தல்.

  75. சொத்து வரி வசூலித்தல்.

  76. பாதாள வடிகால் வரி வசூலித்தல்.

  77. குடிநீர் வரி வசூலித்தல்.

  78. நீர் மற்றும் கழிவுநீர் வரி.

  79. பிறப்புச் சான்றிதழ் அச்சிடுதல்.

  80. இறப்புச் சான்றிதழ் அச்சிடுதல்.

  81. வர்த்தக உரிமம் புதுப்பித்தல்.

  82. நிறுவன வரி வசூலித்தல்.

  83. தொழில் வரி வசூலித்தல்.

  84. சொத்து வரி வசூலித்தல்.

  85. பலமாடிக் கட்டடத்திற்கான தடையின்மை இணக்கச் சான்றிதழ்.

  86. பலமாடிக் கட்டடம்கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரும் தடையின்மைச் சான்றிதழ்.

  87. பலமாடிக் கட்டடம் அல்லாத கட்டடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரும் தடையின்மைச் சான்றிதழ்.

  88. பலமாடிக் கட்டடத்திற்கான தீ பாதுகாப்பு உரிமம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்.

  89. பலமாடிக் கட்டடம் அல்லாத கட்டடம் கட்டுவதற்கான தீ உரிமம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்.

  90. மின் கட்டணம்செலுத்துதல் புதுப்பித்தல்.

  91. புதிய குறைந்த மின் அழுத்தம் இணைப்பு பதிவுசெய்தல்.

  92. புதிய குறைந்த மின் அழுத்தம் இணைப்புக்கான கட்டணம் செலுத்துதல்.

  93. தமிழ்நாடு பொறியியல் கல்விக்கான சேர்க்கை நிகழ்நிலை பதிவு.

  94. பதிவு அடையாள அட்டை அச்சிடுதல்.

  95. சுயவிவரப் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம்.

  96. சுய விவரம் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பம்.

  97. பதிவு செய்ய விண்ணப்பித்தல்.

  98. அலோபதி மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிப்பதற்கான விண்ணப்பம்.

  99. ஓமியோபதி மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிப்பதற்கான விண்ணப்பம்.

  100. அட்டவணைப்படுத்தப்பட்ட X- மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் (அலோபதி).

  101. மருந்துகளை வழங்குவதற்கான உரிமம் / புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் (அட்டவணை x-ல் குறிப்பிட்ட மருந்துகள்)

  102. உரிமம் நகல் பெறுவதற்கான விண்ணப்பம்

  103. பொது விநியோகத் திட்டத்திற்கான ஆதார் ஒருங்கிணைப்பு

  104. ஒப்புதல் சான்றிதழ் ஒருங்கிணைப்பு

  105. பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குதல்

  106. சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் காவல் ரசீது செலுத்துதல்.

  107. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவக் குடும்பத்திற்கு சிறப்பு நிவாரணம் வழங்குதல்

  108. மீன்பிடி குறைந்த காலத்தில் மீனவக் குடும்பத்திற்கு சிறப்பு நிவாரணம் வழங்குதல்

  109. கடன் உதவி திட்டம் விண்ணப்பம்

  110. திருமண உதவித் திட்டம்

  111. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புப் படி

  112. டாக்டர் எம்.ஜி.ஆர் கைத்தறி நெசவாளர்கள் நல அறக்கட்டளையின் கீழ் உதவித்தொகை வழங்குதல்

  113. தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்

  114. தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் முதியோர் ஓய்வூதிய திட்டம்

  115. தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் குடும்ப ஓய்வூதிய திட்டம்

  116. மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா

  117. மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா கீழ் சர்வசிக்க்ஷா யோஜனா திட்டம் விண்ணப்பித்தல்.

  118. தமிழ்நாடு அரசு நில உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஒழுங்குமுறை சட்டம்

 

© 2025 by G.R.K.Kamalakkannan  . All Rigts Reseverd

  • Facebook Clean
  • Twitter Clean
bottom of page